Wednesday 30 January 2013

லேசர் யுகம்


லேசர் யுகம்
[வையவன் 'லேசர் ' என்ற தலைப்பில் எழுதி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவியல் நூலுக்கான முதற் பரிசினைப் பெற்ற நூலின் பகுதிகள்]
லேசர் என்ற சொல் ஒரு நீளமான ஆங்கில வாக்கியத்தின் குறுக்கம் தான். தூண்டப்பட்ட கதிர்வீச்சினால் ஏற்படும் ஒளிப்பெருக்கம் என்ற பொருளைத் தரும் லேசர் யுகம்
லேசர் என்ற சொல் ஒரு நீளமான ஆங்கில வாக்கியத்தின் குறுக்கம் தான். தூண்டப்பட்ட கதிர்வீச்சினால் ஏற்படும் ஒளிப்பெருக்கம் என்ற பொருளைத் தரும் லேசர் யுகம்
லேசர் என்ற சொல் ஒரு நீளமான ஆங்கில வாக்கியத்தின் குறுக்கம் தான். தூண்டப்பட்ட கதிர்வீச்சினால் ஏற்படும் ஒளிப்பெருக்கம் என்ற பொருளைத் தரும் Light amplification of Stimulated emission of radiation என்ற வாக்கியத்தில் அமைந்த சொற்களின் முதல் எழுத்துக்களான L,  A ,S,  E ,Rஎன்ற ஐந்தினையும் ஒருங்கிணைத்ததே அக்குறுக்கம். டிச். எச். மெய்மன் என்பவர் 31 லேசர் கருவியை பொதுமக்களுக்கு இயக்கிக் காட்டினார். அப்போதும் லேசர் முறையின் முக்கியத்துவம் பற்றி அவருக்கே தெரியாது.
அன்று அதன் எண்ணற்ற பயன்பாடுகள் பற்றி எவரும் கனவுகூடக் காணவில்லை. எல்லாச் செயல்களையும் புரியும் கம்ப்யூட்டர் மட்டுமே அதனோடு போட்டியிட முடியும் என்பது அறிவியிலார்  இன்று எட்டியுள்ள முடிவு.
ஆய்வுக்கூட விந்தைகளில் ஒன்றாகத் தொடங்கிய லேசர், இன்று அதிவேக வளர்ச்சி பெற்றுவிட்டது. மருத்துவம், தொழில், பொழுது போக்கு, கம்ப்யூட்டர்கள், அதிநுட்பப் போர்க் கருவிகள் இப்படி அது எல்லாத் துறைகளிலும் நுழைந்து விட்டது.
சயன்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் அறிவியல் திரைப்படங்களில் காட்டப்படும் ஒளி வாள்கள், கதிர் வீச்சுத் துப்பாக்கிகள் இவைகள் யாவும் லேசர் அடிப்படையில் இயங்குவனவே.
நுண்மையான  கண் அறுவை ச் சிகிச்சைகளின் போது ரத்தம் சிந்த வைக்காத கத்திகளாகி, கண்களில் தந்துகிகளை அடைத்து, கண் திரைகளைப் பொருத்தவும் அவை பயன்படுகின்றன.
லேசர்கள் கன உலோகங்களை ரம்பம் போல் அறுக்கின்றன. அவற்றைத் துளையிடுகின்றன. பற்ற வைக்கின்றன. பீங்கான்களில் கூட அவற்றின் தொழில் திறன் மிளிர்கிறது.
லேசர் ஒளிக்கற்றைகள், வீடியோத் தடுகளை ஓடவைக்கின்றன. அச்சிடும் பிளேட்டுகளை வெளிப்படுத்துகின்றன. குரல் ஒலியையும் டிவி சமிக்ஞைகளையும் தொலை தூரங்களுக்குக் கொண்டு சென்று, முப்பரிமாண பிம்பங்களையும் வெளியிடுகின்றன. எல்லை காணுதல், தொலைவில் உள்ள எதிரிகளை உணர்தல் ஆகிய பணிகளுக்கும் அவை பயன்படுகின்றன.
லேசர் அடிப்படையில் மெமரி ஸிஸ்டம் என்று கம்ப்யூட்டர் துறையில் அழைக்கப்படும் நினைவுக் குறியீடுகளைத் தொகுக்கும் பணியில் எதிர்கால அதிவேகக் கம்ப்யூட்டர் அமைப்பிற்காகச் சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.
லேசரைக் கண்டு பிடித்தவர்களில் ஒருவரான சார்லஸ். எச். டவுனெஸ் “லேசர் எல்லாவற்றையும் செய்யும், ஆனால் செலவுதான் அதிகம் பிடிக்கும். அது ஒன்றே அதன் வரம்பு” என்று கூறினார்.
லேசர்களில் புதுப்புது வகைகள் கண்டுபிடிக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. 1960ல் லேசர் வளரத் தொடங்கியதிலிருந்து லேசர் இயற்பியாலாளர்களில் மூவருக்கு மூன்று இயற்பியல் நோபல்பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
வகைவகையான வடிவத்திலும், ஆற்றலிலும், தினுசிலும் வந்த வண்ண முள்ள  லேசர்கள் வெவ்வேறு பணிகளுக்குப் பயன்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.